Monday, 11 November 2013

அபஸ்வரம்


காலிரண்டு பரப்பி
கடை விரிக்கும்
கன்னி பெண் நான்

பகலில் படுத்துறங்கி
இரவில் அலங்கரித்து
விழித்திருக்கும் அழகி நான்.

வாரத்தின் கடைசிநாட்கள்
மாதத்தின் சம்பளநாட்கள்
பண்டிகை விழா நாட்கள்

என் நாட்குறிப்பு விழித்துக்கொள்ளும்
என் அலைப்பேசி ரீங்காரமிடும்
என் கைக்கடிகாரம் மணியடிக்கும்

பச்சை பச்சையாய் பேசி
மஞ்சள் பத்திரிகையில் எழுதி
நீலப்படத்தில் வந்த வண்ண மான்

ஆவேசப்பாட்டுக்கு ஆடினேன்
ஆனந்தகும்மிக்கு தாளமிட்டேன்
ஆசைவரிக்கு  கவிதையானேன்

ரோஜா வண்ண உடையில்
மல்லிகை திரவிய வாடையில்
முல்லை கட்டிலில் கசங்கிய சருகு

சிங்கம் சிலிர்த்திருக்கிறது
புலி புரட்டியிருக்கிறது
காளை கவிழ்த்திருக்கிறது

குதிரை குதித்திருக்கிறது
குரங்கு கீறியிருக்கிறது
நாய் குதறியிருக்கிறது

எருமை எம்பியிருக்கிறது
சேவல் கூவியிருக்கிறது
கரும்பூனை கடித்திருக்கிறது

வலியால் வாடியிருக்கிறேன்
சுகத்தால் முனகியிருக்கிறேன்
இன்பத்தால் இறுகியிருக்கிறேன்

0 comments:

Post a Comment