Monday, 25 November 2013

வெற்றி தேவதை தீபிகா


யார் நம்பர் ஒன் எனத் தீர்மானிக்கும் கருத்துக்கணிப்பு களுக்குப் பாலிவுட்டில் எப்போதுமே பஞ்சமிருக்காது. எத்தனை கருத்துக்கணிப்புகள் நடத்தினால்தான் என்ன? எல்லாவற்றையும் தகர்த்து, இந்திப் படவுலகின் நம்பர் ஒன் நாயகியாக முடிசூடியிருக்கிறார் தீபிகா படுகோன். 2013இல் இவர் நடித்த மூன்று படங்களின் வசூலும் 100 கோடியைத் தாண்டியிருக்கிறது.
2013இல் சைஃப் அலிகானுடன் நடித்த ‘ரேஸ் 2’ முதலில் வெளியானது. அந்தப் படம் 100 கோடி வசூலைத் தொட்டது. அதனைத் தொடர்ந்து ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்த ‘ஏ தீவானி ஹே ஜாவனி’ வெளியாகி 100 கோடி வசூலைத் தாண்டியது. அதனைத் தொடர்ந்து வெளியான ஷாரூக் கானின் சென்னை எக்ஸ்பிரஸ். இந்தப் படம் பல்வேறு சாதனைகளை முறியடித்தது. குறைந்த நாட்களில் 100 கோடி வசூல் என்ற சாதனை படைத்தது. தொடர்ந்து 200 கோடி வசூல் படைத்து பாக்ஸ் ஆபிஸில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது.
‘ஏ தீவானி ஹே ஜாவனி’, சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் தீபிகாவை நம்பர் ஒன் இடத்திற்குக் கொண்டுவந்தன. தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘ராம் லீலா’ திரைப்படம் அவரைப் புகழின் உச்சிக்கு கொண்டுசென்றிருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி விமர்சகர்கள் பலரும் தீபிகா நடித்ததில் சிறந்த படம் ராம் லீலா என்று புகழ்ந்திருக்கிறார்கள். இந்தப் படமும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைக்கும் என்று கூறியிருக்கிறார்கள். படமும் வெளியான கடந்த வெள்ளிக்கிழமை ( நவம்பர்15)16 கோடி, சனிக்கிழமை 17.25 கோடி, ஞாயிறு அன்று 19 கோடி என மூன்று நாட்களில் 50 கோடி மேல் வசூல் செய்திருக்கிறது. ராம் லீலா படமும் 100 கோடி வசூலைத் தாண்டினால், 2013ல் தீபிகா நாயகியாக நடித்த 4 படங்கள் 100 கோடி வசூலை தாண்டியிருக்கும்.
நடிப்பு, அழகு, கவர்ச்சி, ஆகியவை தீபிகாவின் வெற்றிக்கும் வசீகரத்துக்கும் பின்னால் இருக்கின்றன. எத்தனையோ அழகிகளைக் கண்டுள்ள பாலிவுட்டில் தீபிகாவின் அழகு அலாதியானது. அசலான இந்திய முகம், கச்சிதமான உடலமைப்பு, உறுத்தாத கவர்ச்சி, பாத்திரத்திற்குள் ஒன்றிவிடுவது, இன்றைய யுகத்தின் பெண்களை அடையாளப்படுத்தும் ஸ்டைல் ஆகியவை தீபிகாவைத் தனித்துக் காட்டுகின்றன.
அடுத்த ஆண்டும் தீபிகாவுக்கு ஏறுமுகமான ஆண்டுதான்! ரஜினியுடன் ‘கோச்சடையான்’, ஷாரூக் கானுடன் ‘ஹேப்பி நியூ இயர்’ ஆகிய இரண்டு படங்களும் வெளிவர உள்ளன. இதில் கோச்சடையான், தமிழ், தெலுங்கு, இந்தி, ஜப்பான் எனப் பல்வேறு மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள். ஹேப்பி நியூ இயர் படத்தில் ஷாரூக் கான், அபிஷேக் பச்சன் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களின் வசூலும் 100 கோடியைத் தாண்டும் என்று இப்போதே கணித்திருக்கிறார்கள்.
இத்தனை வெற்றிகளையும் வசூலையும் வாரிக் குவிக்கும் வெற்றி தேவதை தீபிகா பாலிவுட்டின் முடிசூடா இளவரசியாக விளங்குகிறார்.

நன்றி: தி இந்து

Thursday, 21 November 2013

திருமணமானவர்கள் விரைவில் கர்ப்பம் அடைய டிப்ஸ்!


புதிதாக திருமணமானவர்கள் சத்தான உணவுகளை உண்ணவேண்டும். ஏனெனில் நிலம் வளமாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். எனவே புதுமண தம்பதியர் அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். நாளொன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பெண்கள் ஆரஞ்சு, காரட் உள்ளிட்டவைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் ஏனெனில் இது செக்ஸ் ஹார்மோனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். ஆண்கள் மீன் உணவுகள், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். இது விந்து வளர்ச்சிக்கு உதவும்.
புதுமணத் தம்பதியர் தினமும் தாம்பத்ய உறவு கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் ஆணின் விந்தணு உற்சாகமடையும். இது டி.என்.ஏவை சிதைவடையாமல் பாதுகாக்கிறது. முறையற்ற மாதவிலக்கு கர்ப்பம் தரித்தலை தாமதப்படுத்தும் எனவே இக்குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெறவேண்டும்.
கட்டுப்பான எடையை கடைபிடிக்க வேண்டும். 28 முதல் 32 நாட்களுக்குள் சுழற்சியாக பெண்களுக்கு மாதவிடாய் வருவது ஒழுங்கான மாதவிடாய் பருவமாகும். மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து 14-வது நாள் பெண்ணின் முட்டை வெளியேறும்.
இந்த முட்டை வெளியேறி 24 மணி நேரத்திற்குள் ஆணின் விந்தணுவை சந்தித்தால் கரு உருவாகும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும். மதுபழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
புகைப்பிடித்தலை அறவே ஒதுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். பெண்கள் காபி குடிப்பதை தவிர்ப்பது கர்ப்பம் தரித்தலை 50 சதவிகித வாய்ப்பை அதிகரிக்கிறது. தினமும் 40 நிமிட உடற்பயிற்சி அவசியம். இது தம்பதியரின் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து மன அழுத்ததை நீக்குகிறது.
உடலில் நோய் தாக்காமல் தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் புள்ளி விவரக் கணக்கின்படி ஒரு பெண் தன்னுடைய இருபது வயதிலிருந்து முப்பது வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதே சிறந்த காலகட்டமாகக் கருதப்படுகிறது.
20க்கு குறைந்தோ அல்லது முப்பதுக்கு மேற்பட்டோ குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தாயின் உடல் ரீதியாகவும், குழந்தையின் வளர்ச்சி ரீதியாகவும், பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முப்பது முப்பத்தைந்து வயதுக்கு மேல் கர்ப்பம் தரிக்கும் பெண்கள், இளம் வயது கர்ப்பிணிகளை விட பல இன்னல்களுக்கு ஆளாவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
பெண்களுக்கு வயதாவது என்பது நோயல்ல என்றாலும் வயது ஆக ஆக இடுப்பு எலும்பு நெகிழ்ந்து குழந்தை வெளிவருவதற்கு சுலபமாக வழி ஏற்படுத்தி கொடுக்க இயலாமல் போய்விடும்.
முதிர்ந்த பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்புகளும், மூளை பாதிப்புகளும் இருக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மூளை வளர்ச்சி குன்றிய அல்லது உடல் குறைகளுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
ஆனால் இதற்கான பரிசோதனைகள் முன் கர்ப்ப காலத்திலேயே செய்யப்பட்டு கண்டறிந்து சொல்வதற்கான மருத்துவ முன்னேற்றங்களும் இப்போது அதிகரித்துள்ளன. கர்ப்பம் தரித்தபின்னர் இயற்கையான எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம்.
செயற்கையான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. பழுத்த அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. போலிக் அசிட் எனப்படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்குவது நல்லது இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
வேறு எந்த மாத்திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும். எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கு முன்னும் ஆலோசனை பெறவேண்டும். நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள்
இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும்.

Wednesday, 20 November 2013

இன்றைக்கு என்ன குழம்பு வைப்பது,


மனம் விரும்பி, இது என் வேலை என மனம் ஒப்பிச் சமைக்க வரும் ஆண்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்னை/கேள்வி இன்றைக்கு என்ன குழம்பு வைப்பது, என்ன காய் சமைப்பது என்பதுதான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் பெண்கள் சந்தித்துவரும் கேள்விதான் இது. நூற்றுக்கணக்கான குழம்புகள் அறிந்த பாட்டிமார்கள் இப்போது நம்மோடு இல்லை. இங்குதான் சமையல் குறிப்புப் புத்தகங்கள் நமக்குக் கை கொடுக்கும்.
என் சமையல் அனுபவத்தில் நான் சொல்ல விரும்புவது என்னவெனில் நாமே செய்து பார்த்து புதிய குழம்பு வகைகளை உருவாக்கி இச்சமூகத்துக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். ஆண்கள் அறிந்துகொள்ள வேண்டியது எல்லாக் குழம்புகளுக்குமான சில அடிப்படைகளைத்தான். உப்பு+புளிப்பு+உரைப்பு -இந்த மூன்றுதான் எல்லா வகைக் குழம்புக்கும் அடிப்படை. இவை மூன்றும்போக ஒவ்வொரு வகைக் குழம்புக்கும் என சில பலசரக்கு வகைகள் மட்டும் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான்.
சாம்பாரை விட்டால் சைவத்தில் அடுத்த இடத்தில் நிற்பது புளிக்குழம்புதான்.ஓட்டல்களில் வைக்கும் வத்தக்குழம்பு என்பது வேறு.
முதலில் ஒரு கிண்ணத்தில் சிறிய எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக்கொள்ள வேண்டும். கத்தரிக்காய் நாலு,முருங்கைக்காய் ஒன்று,தக்காளி இரண்டு இவற்றைக் கழுவி நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். நறுக்கிய பிறகு கழுவாமல், கழுவிய பிறகு நறுக்குவதுதான் சரி. காய்களில் உள்ள நீர்ச்சத்து வீணாகாமல் இருக்கும்.
புளிக்குழம்புக்கான மசாலாவுக்கு முதலில் மல்லி விதை, சீரகம், சிறிது கடலைப்பருப்பு, ஆறு அல்லது ஏழு மிளகாய் வத்தல், பூண்டு 4 பல் இவற்றைத் தனித்தனியாக வறுத்து (சிவக்க) எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொன்றும் வறுபடும் தன்மை வேறானது என்பதால் தனித்தனியாக வறுக்கிறோம். நாலு சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை அம்மியில் வைத்து நீர் சேர்த்து (அல்லது மிக்ஸியில் போட்டு) நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு தேங்காய்ச்சில்லு இப்போதே சேர்த்து அரைக்கலாம். அல்லது தனியாக அரைத்துக் கடைசியில் குழம்பில் சேர்க்கலாம்.
இப்போது ஊறவைத்த புளியைக் கரைத்து குழம்புச்சட்டியில் ஊற்றி, நறுக்கிய காய்களையும் போட்டு அரைத்த மசாலாவையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீரும் உப்பும் சேர்த்து மூடி அடுப்பில் வைத்து வேக விடவேண்டும்.காய்கள் வெந்து விட்டதை அவ்வப்போது திறந்து பார்த்துக்கொள்ள வேண்டும். தக்காளி குழைந்து விட்டதைப் பார்த்தாலே வெந்ததை அறியலாம். இது போகப்போகப் பழகிவிடும். வாசனையை வைத்தே வெந்ததை அறிய காலப்போக்கில் நம் மூக்கும் பழகிவிடும். உப்பு கம்மியாகப் போட்டதைக்கூட வாசனையால் அறிந்து கொள்ள மூக்கு பயிற்சி எடுத்துவிடும்.
பிறகென்ன? சாம்பாருக்குச் சொன்னதுபோல தாளித்து, தாளிதத்தைக் குழம்பில் கொட்டி இறக்கிவிட வேண்டியதுதான். புளிகுழம்பு தயார்.
மசாலாவை தண்ணீர் சேர்க்காமல் நல்லெண்ணெயில் வதக்கி அதோடு நறுக்கிய காய்களையும் போட்டு வதக்கி அப்புறம் புளிக்கரைசலை ஊற்றி உப்பும் தண்ணீரும் சேர்த்து இதே குழம்பை தயாரித்தால் வேறு ருசி வரும்.
இந்த மசாலாவோடு பெருஞ்சீரகம் சேர்த்து அரைத்தால் அது ஒரு ருசி. கசகசா சேர்த்தால் அது ஒரு ருசி. இப்படி இன்னும் ஏதாவது சேர்த்தும் குறைத்தும் புதிய வகைகளை நாம் உருவாக்கலாம்.

கொடிய நரகங்கள்

1 . பிறன்மனைவி,குழந்தை,பொருள் இவற்றை கொள்ளையடிப்போர்அடையுமிடம் தாமிரை நரகம். 

2 . 
கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில்இருள்,கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.

3 .
அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப்பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும்.

4. 
குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்துதுன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும்.

5. 
தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில்வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம்.

6. 
பெரியோரையும்பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும்நரகம் காலசூத்திரம்.

7. 
தன தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்தஅதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும்.

8 .
அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக்கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.

9. 
சித்திரவதைதுரோகம்கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம்அந்தகூபம்.

10.
தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து,பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.

11 .
பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால்அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினிகுண்டம்.

12. 
கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும்மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம்.

13. 
நன்மைதீமைஉயர்வுதாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டுஎல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம்சான்மலியாகும்.

14 .
அதிகார வெறியாலோகபடவேசத்தாலோநயவஞ்சகத்தாலோநல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி.

15 .கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தனவழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும்கயவர்கள் அடையும் நரகம் பூயோதம்.

16 .
பிராணிகளைத் துன்புறுத்திக் கொலை புரியும் கொடுமைக்காரர்கள்அடையும் நரகம் பிராணரோதம்.

17 . 
டம்பத்திற்க்காக பசு வதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம்.

18 .
வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி விபரீத மோக இச்சைக்குஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம்.

19 .
வீடுகளுக்கு தீ வைப்பதுசூறையாடுவதுஜீவா வதை புரிவது,விஷமூட்டுவது, கூட்டங் கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்றசெயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.

20 .
பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள்அடையும் நரகம் அவீசி.

21 .
எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும்குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம்.

22 .
தன்னை மட்டுமே பெரியதாய் மதித்து பெரியோரையும்நல்லோரையும்அவமதித்து தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் கஷாரகர்த்தமம்.

23 .
நரமேத யாகம் புரிதல்ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம்புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினைபுரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம்.

24 .
எவ்விதத் தீமையும் புரியோதாரைக் கொல்லுதல்நயவஞ்சகமாகக்கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல்நம்பிக்கைத் துரோகம்புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம்.

25 .
தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம்.

26 .
பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும்நரகம் வடாரேவதம்.

27 .
வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும்பகிர்ந்துண்ண விரும்பாத சுயனலவாதிகாலும் அடையும் நரகம்பரியாவர்த்தனகம்.

28 .
செல்வச் செருக்காலும்செல்வாக்கினாலும்பிறரைத்துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்துஅறநெறிகளில்செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம்என்பதாகும்.

Sunday, 17 November 2013

பெண் விரும்பும் ஆண்


தான் விரும்பிய பெண்ணை மிக எளிதாக அடைந்து விடும் ஆண்களுக்கென சில விஷேசக் குணங்கள் இருப்பதாக காமசூத்திரம் தொகுத்துக் கூறுகிறது. எப்படி? நாமும் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்... 

பெண்களைச் சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்பவன். 

விருந்துகளில் மகிழ்ச்சியாக இருப்பவன் 

ஏராள, தாராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன் 

பிற ஆணுக்காகத் தூது செல்பவன் 

அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்
 
உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன் 

அதிகத் துணிச்சல் உள்ளவன் 

ஒன்றக வளர்ந்தவன்... 

காம சாஸ்திரம் நன்கு கற்றவன் 

அடிக்கடி பெண்கள் பார்வையில் தெரியும் படி இருப்பவன், நடந்து கொள்பவன்.... 

இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன் 

மனதைக் கவரும் கதை சொல்வதில் வல்லவன்... 

புதுமாப்பிள்ளை 

முதலாளியாக இருப்பவன் 

தாராள மனப்பான்மை உள்ளவன் 

ரகசியத்தை அறிந்தவன் 

அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன் 

பெண்ணின் கணவனை விட, அழகிலும், அறிவிலும் சிறந்தவன்....

பற்களை பளிச்சென்று வைக்க


பொதுவாகவே கால்சியம் சத்து பற்களுக்கு உறுதியை அளிக்கிறது. பற்கள் எப்போதும் பளிச்சென்று இருக்க அதனை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.
பற்களை தேய்க்கிறோம் என்று பிரஷ்ஷில் பேஸ்டை வைத்து 5 நிமிடம் தேய்த்து துப்பி விடுவதால், பற்களுக்கு எந்த பெரிய நன்மையும் விளைந்துவிடப் போவதில்லை.
அதற்கு பதிலாக பற்களை தேய்த்ததும், பல் ஈறுகளை விரலை வைத்து நன்கு அழுத்தி மசாஜ் செய்வது போல தேய்த்து விட வேண்டும். அப்போதுதான், ஈறுகளில் தேங்கியிருக்கும் கெட்ட நீர் வெளியேறி, ஆரோக்கியமான பற்களைப் பெறலாம்.
அதேப்போல, கருப்பு டீ, சிகரெட் பிடிப்பது, பான்பராக் சாப்பிடுவது, அடர்த்தியான நிற பழச்சாறுகளை அடிக்கடி குடித்தால் பற்களின் நிறம் மங்குகிறது.
எனவே, இதுபோன்ற பொருட்களை சாப்பிட்டதும், பற்களை துலக்கினால் மங்கலான பற்கள் மாறி பளிச்சென்ற பற்களைப் பெறலாம்.

இதய நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள 3 வழிகள்


இதய நோய்.. அவசர உலகில் மோசமான உணவு பழக்க வழக்கம் மற்றும் உடல் உழைப்பின்மை காரணமாக பலருக்கும் ஏற்படும் நோய்களில் ஒன்றாக இதய நோய் உள்ளது.
உடல் உழைப்பின்மையும், நொறுக்குத் தீணி பழக்கமும், உடல் பருமனை ஏற்படுத்துகிறது. இதன் மூலமாக இதய நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
இதனை தவிர்க்க மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும்.
அதாவது, ஆரோக்கியமான உணவு... ஆலிவ் ஆயில், தானியங்கள், காய்கறிகள், கடல் உணவுகள் போன்றவற்றை ஆரோக்கியமாக தயாரித்து சுகாதாரமான முறையில் உண்ண வேண்டும். இன்னமும், க்ரிக் நாடுகளில் தங்களது பழமையான உணவுப் பழக்கத்தைக் கையாறும் மக்களுக்கு இதய நோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வுகள் சான்றளிக்கின்றன.
சிகரெட் பிடிக்காதீர்
இதயநோய்களை ஏற்படுத்தும் காரணிகளில் சிகரெட் பிடிப்பது முக்கியமான விஷயமாக உள்ளது.  இந்த காரணத்தால், அமெரிக்காவில் தற்போது புகைப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஆனால், மோசமான செய்தி என்னவென்றால், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இந்தியா, சீனாவில் புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய் மட்டுமே ஏற்படும் என்று எண்ணி வந்துள்ளோம். ஆனால், புகைப்பதால் இதய நோய் ஏற்படும் என்ற விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
நடையை ஓரம்கட்டாதீர்
பலருக்கும் இப்போது நடப்பதற்கான வாய்ப்பே குறைவாக உள்ளது. எங்கு செல்வதென்றாலும் வாகனத்திலும், ஆட்டோவிலும் செல்கிறோம். முன்பெல்லாம் வசதி இல்லாததால் அதிகம் நடந்தார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தார்கள். இதய நோய் ஏற்பட்டு மருத்துவமனைக்கு நடையாய் நடக்க வேண்டாம் என்று விரும்பினால், இப்போதே ஆரோக்கியமாக நடைபயணம் மேற்கொள்வோம்.

பன்றிக் காய்ச்சலுக்கு மருந்து!


தோஷங்களாகிய வாத, பித்த கபங்களின் சம்பந்தமில்லாமல் எந்தவித காய்ச்சலாகட்டும், நோய்களாகட்டும் ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
வெயிலில் பறக்கும் பறவை, தன் நிழலைப் பார்த்து "நீ மேற்கே போ, நான் தெற்கே போகிறேன்' என்று எவ்வாறு கூற இயலாதோ, அதைப் போலவே, நோய்கள் எத்தனை வகையானாலும், மூன்று தோஷங்களின் சேர்க்கை இல்லாமல் ஏற்பட வாய்ப்பில்லை. அந்த வகையில் பன்றிக்காய்ச்சலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்தே தோஷங்களின் சீற்றத்தை ஊகித்தறிந்து வைத்தியம் செய்தோமேயானால், நோய் விரைவில் விலகிவிடும்.
எச்.என். வைரஸ், உடலில் கட்டுக்கோப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தோஷங்களின் உள்ளே ஊடுருவும்போது, தோஷங்கள் தம் கட்டுப்பாடுகளை இழந்து சீற்றம் கொள்கின்றன. இருமல், தும்மல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, வாந்தி, நாக்கு சுவையற்றுப்போதல், சோம்பல், நாவறட்சி, கொதிப்புடன் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவை வாத கப தோஷங்களின் சீற்றத்தால் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் அவர் அருகில் சென்று பேசுவதை தவிர்க்க வேண்டும். தும்முவது, இருமுவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். மேலும் அந்த நபருக்கு வெந்நீர் பருகச் செய்வது மிகவும் நல்லது.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகளுடன் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டால் பித்த தோஷத்தின் "சரம்' எனும் மலத்தை இளக்கும் குணம் சீற்றமடைந்திருப்பதைத் தெரிவிக்கிறது. அந்த நிலையில் சாதாரண வெந்நீரைவிட கோரைக்கிழங்கு, பர்பாடகம், வெட்டிவேர், சந்தனம், நன்னாரி, சுக்கு ஆகிய மூலிகைகளைச் சம அளவில் மொத்தமாக பதினைந்து கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, அரை லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, வடிகட்டி, சூடு ஆறியதும் சிறுகச் சிறுகப் பருகச் செய்ய வேண்டும். இதற்கு "ஷடங்க பாநீயம்' என்று பெயராகும்.
இந்த இருவகை நீரும் செரிமானத்தைத் தூண்டி உடலில் உணவுச் சத்து, இரத்தம் பரவும் வழிகள், வியர்வை தோன்றும் வழிகள் ஆகியவற்றைத் தூய்மையடையச் செய்யும். உடலுக்கு வலுவைக் கூட்டும். சுவையுண்டாக்கும். உடலை வியர்க்கச் செய்யும். பன்றிக் காய்ச்சல் ஏற்படாதிருக்கவும் இந்த ஷடங்க பாநீயம் எனும் நீரை யாவரும் பருகலாம். வியாக்ரயாதி கஷாயம் 15 மிலி எடுத்து 60 மிலி வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து சிட்டிகை தாளீசபத்ராதிசூரணத்துடன் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட உகந்தது.
முன் குறிப்பிட்ட அறிகுறிகளுடன் நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், சளியில் ரத்தம் கலந்திருத்தல், மயக்கம், ரத்த அழுத்தம் குறைந்து விடுதல், நகங்கள் நீல நிறமாக மாறுதல், கோழை, பித்தம் அதிகமாக வெளியேறுதல், வாய் குழ குழத்தல், வாய்க்கசப்பு, தூங்கி வழிதல் போன்றவை காணப்பட்டால் கபத்துடன் பித்தம் சீற்றமாகியுள்ளதாக அறியலாம்.
ஒரு வில்வாதி குளிகையை, 15 மிலி குடூச்யாதி கஷாயத்துடன் சேர்க்கப்பட்ட 60 மிலி தண்ணீரில் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, காய்ச்சலுடன் கூடிய மேற்கூறிய அறிகுறிகள் மறைந்து விடும். ஆய்வகப் பரிசோதனையில் நோயாளிக்கு எச்.என்.வைரஸ் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டால் ஆஸ்பத்திரி அல்லது வீட்டில் தனி அறையில் ஓய்வெடுத்து மருந்தைச் சாப்பிட்டு வர வேண்டும்.
வாத பித்த தோஷங்களின் சீற்றத்தால் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டால் தலைவலி, விரல் கணுக்கள் சிதைந்து போவது போன்ற துன்பம், உடல் கொதித்தல், மயிர்க்கூச்செரிதல், தொண்டையும் வாயும் வறண்டு போதல், வாந்தி, நாவறட்சி, மயக்கம், மூர்ச்சை, நாக்கு சுவையற்றுப் போதல், தூக்கமின்மை, அதிகமாகப் பேசுதல், கொட்டாவி போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்துகாந்தம் கஷாயம் 15 மிலி, 60 மிலி வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து, ஒரு ஸ்வர்ண முக்தாதி மாத்திரையுடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
பன்றிக் காய்ச்சல் இருமல், தும்மல், சளி அதிகமிருந்தால் சீதச் ஜுராரி எனும் கஷாயம், துளசி மற்றும் மிளகு ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது. அதை காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட இது போன்ற அறிகுறிகள் குறைவதுடன் மற்றவர்களுக்குப் பரவும் தன்மையும் குறைந்துவிடும்.
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

அழகுக்கு அழகு சேர்க்கும் தக்காளி


பொதுவாக தக்காளி அனைத்து வீடுகளிலும் சமையலறையில் பயன்படுத்தும் பொருள். பெண்களின் அழகை கூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களை அழகுப் படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வதை விட வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து நம்மை அழகுப்படுத்தி கொள்ளலாம்.
* தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் பூசினாற் போல் ஆகிவிடும்.
* ஒரு சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும் மேக்கப் போட்டாலும் தங்காது. இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும். எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும்.
* தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.
* உருளைக்கிழங்கு துருவல் சாறு 1 தேக்கரண்டி, தக்காளி விழுது அரை தேக்கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து தக தகவென்று மின்னும்.
* சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டதா? தக்களி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள்.
* தக்காளிச் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பிரகாசிக்கும். இதுதான் இயற்கை ஸ்கரப்பாக உபயோகிக்கலாம்.

சீதாப்பழம் மில்க் ஷேக் ஜூஸ்


தேவையான பொருட்கள்.....
 
விதை நீக்கிய சீதாப்பழம் - 100 கிராம்,
சுகர் - 200 கிராம்,
தண்ணீர் - 100 மி.லி.
எலுமிச்சம்பழச்சாறு  -  2 அல்லது 3 துளிகள்,
பால் - தேவையான அளவு,
 
செய்முறை...
 
* விதை நீக்கிய சீதாப்பழத்தை மிக்ஸியில் அரைத்து கூழாக்கி பால், தண்ணீர், எலுமிச்சம் பழம், சுகர், எல்லாத்தையும் கலந்து ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
* தேவையான போதெல்லாம் அப்படியே எடுத்துக் குடிக்கலாம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கெடாமல் இருக்கும். இதை காலை நேரங்களில் குடிப்பது தான் சரியானது!

ஆரோக்கிய ஜூஸ்


தேவையான பொருட்கள்....
 
புதினா - கைப்பிடி அளவு,
துளசி - கைப்பிடி அளவு,
கற்பூரவள்ளி இலை -கைப்பிடி அளவு,
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
சுக்குப் பொடி - கால் டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
சர்க்கரை- 200 கிராம்,
தண்ணீர் - 100 மில்லி
எலுமிச்சம் பழம் -கால் பழம்.
 
செய்முறை....
 
* புதினா, துளசி, கற்பூரவள்ளி இலை, மூன்றையும் நன்றாக கழுவி  மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
• அதோடு மிளகுத்தூள், சுக்குப்பொடி, உப்பு கலந்து கொள்ளவும்.
 
• சர்க்கரை, தண்ணீர், எலுமிச்சம் பழத்தைக் கலந்து சூடேற்றி ஆறிய பிறகு, தனியாக வைத்திருந்த அனைத்தையும் ஒன்று சேர்த்தால் ஆரோக்கி ஜூஸ் ரெடி.
 
• அரை க்ளாஸ் மெடிக்கல் ஜூஸோடு பெரியவர்களுக்கு சோடாவை ஊற்றிக் கொடுக்கலாம்.
 
• குழந்தைகள் என்றால் தண்ணீரைக் கலந்து கொடுப்பதுதான் நல்லது.